Home நாடு “தாமான் ரிம்பா கியாரா விவகாரத்தில் நாங்கள் தீவிரமாக உள்ளோம்!”- ஊழல் தடுப்பு ஆணையம்

“தாமான் ரிம்பா கியாரா விவகாரத்தில் நாங்கள் தீவிரமாக உள்ளோம்!”- ஊழல் தடுப்பு ஆணையம்

709
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தாமான் ரிம்பா கியாரா தொடர்பான விசாரணையில் ஊழல் தடுப்பு ஆணையம் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருவதாக அரசாங்கத் தரப்பினர் குற்றம் கூறியதைத் தொடர்ந்து, அத்திட்டம் தொடர்பான புதிய தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, ஊழல் தடுப்பு ஆணையம் தனது புலன் விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளதாக ஊழல் தடுப்பு ஆணையத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸாம் பாக்கி கூறியுள்ளார்.

“நாங்கள் இந்த விவகாரத்தில் சரிவர விசாரணையை மேற்கொள்ளவில்லை எனக் கூறுவது தவறாகும்” என்று அவர் கூறினார்.

“புலன் விசாரணை அதிகாரிகள் பல்வேறு தரப்பினரிடமிருந்து தகவல்களை பெற்று வருகின்றனர். கூடிய விரைவில் இந்த விவகாரத்தை மறு ஆய்விற்காக அரசு தரப்பு துணை வழக்கறிஞரிடம் ஒப்படைப்போம்” என்று அஸாம் குறிப்பிட்டார்.