Home நாடு நில பரிமாற்றங்கள்: ஊழல் ஆணைய விசாரணையில் ஹிஷாமுடின், சாஹிட்…

நில பரிமாற்றங்கள்: ஊழல் ஆணைய விசாரணையில் ஹிஷாமுடின், சாஹிட்…

829
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – மலேசியத் தற்காப்பு அமைச்சுக்குச் சொந்தமான நிலங்களைப் பரிமாற்றம் செய்தது தொடர்பில் ஊழல் நிகழ்ந்திருப்பதாக விசாரணை நடத்தி வரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், இதன் தொடர்பில் முன்னாள் தற்காப்பு அமைச்சர்கள் அகமட் சாஹிட் ஹாமிடி, ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் ஆகியோரையும் விசாரணைக்கு அழைக்கவிருக்கிறது.

இதற்கிடையில் ஹிஷாமுடின் தனது சார்பில் தனியான அறிக்கை ஒன்றை ஊழல் தடுப்பு ஆணையத்தில் கடந்த வாரம் சமர்ப்பித்திருந்தார்.

“எல்லா அறிக்கைகளையும் ஊழல் தடுப்பு ஆணையம் ஆராயும். எங்களுக்கு உதவக் கூடிய அனைவரையும் விசாரிப்போம். இதற்காக எங்களுக்கு கால அவகாசம் பிடிக்கும்” என ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கான துணை ஆணையர் டத்தோஸ்ரீ அசாம் பாக்கி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தற்காப்பு அமைச்சின் 16 நில பேரங்களில் ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால் அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மகாதீர் அறிவித்திருந்தார்.
2009 முதல் 2013 வரை அகமட் சாஹிட் தற்காப்பு அமைச்சராக இருந்தார். ஹிஷாமுடின் அதற்குப் பின்னர் தற்காப்பு அமைச்சராகப் பணியாற்றினார்.