Home இந்தியா தமிழக நாடாளுமன்றம்: திமுக 25 தொகுதிகளில் முன்னிலை, இயந்திர வாக்குகள் எண்ணப்படுகின்றன!

தமிழக நாடாளுமன்றம்: திமுக 25 தொகுதிகளில் முன்னிலை, இயந்திர வாக்குகள் எண்ணப்படுகின்றன!

745
0
SHARE
Ad

சென்னை: (மலேசிய நேரம் காலை 11:40 மணி நிலவரம்) இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் வேளையில், தபால் வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு வந்த நிலையில், தற்போது இயந்திர வாக்குகளும் கணக்கிடப்பட்டு வருகின்றன.

சிவகங்கை தொகுதியின் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இத்தொகுதியில் இவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் இருக்கிறார்.

வடசென்னை தொகுதியில் திமுகவின் கலாநிதி வீராசாமி, நாமக்கல் தொகுதியில் சின்ராஜ் முன்னிலையில் இருக்கின்றனர். மேலும், தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி, பெரம்பலூரில் பாரிவேந்தர் ஆகியோர் முன்னிலையில் இருக்கின்றனர். இதே போல் நெல்லையில் திமுக வேட்பாளர் ஞானதிரவியம், கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் கௌதம் சிகாமணி முன்னிலையில் உள்ளனர்

#TamilSchoolmychoice

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் திமுக 25 நாடாளுமன்ற தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதிமுக 2 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.