Home இந்தியா நரேந்திர மோடி: 2014-ஆம் ஆண்டை விட கூடுதல் தொகுதிகள், நாளை நாடாளுமன்றக் குழு கூடுகிறது!

நரேந்திர மோடி: 2014-ஆம் ஆண்டை விட கூடுதல் தொகுதிகள், நாளை நாடாளுமன்றக் குழு கூடுகிறது!

698
0
SHARE
Ad

புது டில்லி: 272 பெரும்பான்மையைக் கடந்து பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக கட்சி இரண்டாவது முறையாக ஆட்சியை அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகள், சர்ச்சைகளுக்கு அப்பால், இலகுவான பெரும்பான்மையில் அவர் வெற்றிப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டை விட அதிக தொகுதிகளை வென்று மீண்டும் பிரதமர் பதவியை ஏற்பார் எனக் கூறப்படுகிறது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் உட்பட, பெரும்பாலான மாநிலங்களில் பாஜக வெற்றியைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்திலும் பாஜக முன்னிலையில் உள்ளது.  தமிழ் நாடு மற்றும் பஞ்சாப்பில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அளவில் பாஜக பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அதே போல் இன்று வியாழக்கிழமை கணக்கிடப்பட்டு வரும் வாக்குகள் அவற்றை உறுதி செய்யும் வகையில் இடம்பெற்றுள்ளன. 

#TamilSchoolmychoice

வாக்குகளை எண்ணத் தொடங்கிய அரை மணி நேரத்தில் பாஜக அதிவேகத்தில் முன்னிலை பெற்றது. தற்போது, 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளுடன் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை அமைக்கும் தகுதியை பாஜக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

கடந்த ஐந்தாண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மந்தமான பொருளாதாரம், வேலைகளை உருவாக்குவதில் தோல்வி, விவசாயத் துறை நெருக்கடி மற்றும் வலதுசாரி அணியினரின் உயர்மட்டக் குற்றங்கள் ஆகியவற்றால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டார். அவற்றை கடந்த ஒரு வெற்றியை மோடி அடைந்துள்ளார்.