Home நாடு முக்ரிஸ் மகாதீர் ஜோகூர் சுல்தானிடம் மன்னிப்புக் கோரினார்!

முக்ரிஸ் மகாதீர் ஜோகூர் சுல்தானிடம் மன்னிப்புக் கோரினார்!

974
0
SHARE
Ad

அலோர் ஸ்டார்: ஜோகூர் சுல்தானிடம் கை குலுக்காமல் வணங்கி மட்டும் சென்ற கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீரின் நடவடிக்கையை பெரும்பாலான மக்கள் சமூகப்பக்கங்களில் சாடி வந்த நிலையில், தமது அச்செயலுக்கு சுல்தானிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக முக்ரிஸ் மகாதீர் கடிதம் ஒன்றினை அனுப்பி உள்ளார்.

தமது கவனக் குறைவினால் இந்த தவறு நடந்து விட்டதாக அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அவருடைய இந்த செயலுக்கும் கெடா மாநில மக்களின் நிலையைக் குறிப்பதாக எண்ணிவிடக் கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

14 வினாடிகளைக் கொண்ட ஒரு காணொளியை துங்கு மக்கோத்தா ஜோகூர் இன்று வெள்ளிக்கிழமை சமூகப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த காணொளியில் முக்ரிஸ் மகாதீர், ஜோகூர் சுல்தானை வணங்கி கைகுலுக்காமல் இதர சுல்தான்களுடன் கை குலுக்கும் காணொளி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஏற்கனவே, சுல்தான் ஜோகூர் மற்றும் பிரதமர் மகாதீருக்கும் இடையில் மோதல்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. துங்கு மக்கோத்தா ஜோகூர், மகாதீரிடம் கைக்கொடுக்கும் போது, ஏன் முக்ரிஸ் அதனை செய்யக்கூடாது என மக்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.