Home நாடு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருக்கும் காவல் அதிகாரிகள் கைது செய்யப்படுவர்!

சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருக்கும் காவல் அதிகாரிகள் கைது செய்யப்படுவர்!

724
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அனைத்து காவல் துறை அதிகாரிகளும், சூதாட்டக் குழுக்கள் மற்றும் மத அல்லது ஒழுக்க சட்டத்தை முறித்து செயல்படுபவர்களுடன் தொடர்பில் இருந்தால் அதனை உடனே நிறுத்திக் கொள்ளுமாறு காவல் துறைத் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்படுவதற்கு முன்னர் எந்தவொரு சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்களுடன் தொடர்பில் இருந்தால் அதை உடனே நிறுத்த வேண்டுமென்று அவர் எச்சரித்தார்.

நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை பாதுகாக்கவோ, உடந்தையாக இருக்கவோ காவல் துறை செயல்படாது என அவர் குறிப்பிட்டார். அதிகமான அதிகாரிகள் இம்மாதிரியான நபர்களுடன் உடந்தையாக செயல்படுவதைக் கண்டு தாம் வருத்தம் கொள்வதாக ஹாமிட் தெரிவித்தார்.