Home இந்தியா காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தொடர்வார்!

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தொடர்வார்!

876
0
SHARE
Ad

புதுடில்லி – (மலேசிய நேரம் மாலை 6.40 மணி நிலவரம்) இன்று நடைபெற்ற  காங்கிரஸ் கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பேச்சாளர் கே.சி.வேணுகோபால், பொதுத் தேர்தல் முடிவுகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்றுத் தனது தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதற்கு ராகுல் காந்தி முன்வந்தார் எனவும், எனினும் சோதனையான இந்தக் காலக்கட்டத்தில் ராகுல் காந்தியின் தலைமை தொடர வேண்டும் என மத்திய செயலவை முடிவு செய்ததால் அவரது பதவி விலகல் முடிவைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறினார்.

வேணுகோபால் கர்நாடக மாநிலத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளருமாவார்.

இதே பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரண்டீப் சுர்ஜிவாலா, ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோரும் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.