வாரணாசி: 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வரலாறு காணாத வெற்றியை தொடர்ந்து, பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் மோடி நேற்று திங்கட்கிழமை பேசினார்.
சில மாநிலங்களில் தங்களது அரசியல் காரணங்களுக்காக நூற்றுக்கணக்காண பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இப்படி பாஜகவினர் மீதான அரசியல் தீண்டாமை நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒரு சில இடங்களில் பாஜக என்ற பெயரே தீண்டாமை சூழலை உருவாக்கும் வகையில் இருந்துள்ளதை மோடி குறிப்பிட்டுள்ளார்.
“மேற்கு வங்காளம், கேரளா மற்றும் காஷ்மீரில் எதற்காக பாஜக பிரமுகர்கள் கொல்லப்படுகின்றனர்? இது ஜனநாயகத்திற்கு எதிரானது மற்றும் வெட்கக் கேடானது. ஆனால் இன்று, ஒரு கட்சி நிம்மதியாக, ஜனநாயக முறையில் மூச்சு விடுகிறது என்றால் அது பாஜகதான்” என்று அவர் கூறினார்.
மேற்கு வங்காளத்தில் 2012-இல் இரண்டு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற பாஜக, தற்போது 16 தொகுதிகளில் வென்றுள்ளது. அந்த மாநிலத்தில் நடந்த ஒவ்வொரு கட்ட தேர்தலின் போதும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என அவர் கூறினார்.
வாரணாசி தொகுதியில் மாபெரும் வாக்குகள் பெற்று 4.79 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014 தேர்தலைகாட்டிலும்ஒருஇலட்சம்வாக்குகளை அவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.