Home நாடு அடிப்: டோமி தோமசின் முடிவிற்கு பிரதமர் ஆதரவு!

அடிப்: டோமி தோமசின் முடிவிற்கு பிரதமர் ஆதரவு!

1028
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடிப்பின் மரண விசாரணையில், வீடமைப்பு மற்றும் நகராட்சிமன்ற அமைச்சை பிரதிநிதித்து வந்த வழக்கறிஞர் ஷாஸ்லின்னின் நியமனத்தை இரத்து செய்யக் கோரிய, அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ்சின் முடிவினை தாம் ஆதரிப்பதாக  பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பில் டோமி தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

அவர் அரசாங்க தலைமை வழக்கறிஞர். என்ன செய்தாலும், அதில் ஒரு காரணம் இருக்கும். மேலும், அவர் அமைச்சை பிரதிநிதிப்பதிலிருந்து மட்டுமே விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். ஆனால், ஷாஸ்லின் அடிப்பின் குடும்பத்தை பிரதிநிதிப்பதிலிருந்தும் விலகிக் கொண்டுள்ளார்” என்று பிரதமர் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த திங்கட்கிழமை, அடிப்பின் வழக்கிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக ஷாஸ்லின் எந்த ஒரு கருத்தினையும் முன்வைக்காமல் குறிப்பிட்டிருந்தார்.