Home நாடு மின்சாரக் கட்டண அதிகரிப்பு: டிஎன்பி விளக்கம் திருப்தி அளிக்கவில்லை!- இயோ இ பின்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு: டிஎன்பி விளக்கம் திருப்தி அளிக்கவில்லை!- இயோ இ பின்

817
0
SHARE
Ad
படம்: நன்றி ஸ்டார்

கோலாலம்பூர்: அதிகபடியான மின்சாரக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவது குறித்த புகார்களை தொடர்ந்து, நேற்று செவ்வாய்க்கிழமை டிஎன்பின் நிறுவனம் கொடுத்த விளக்கம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று எரிபொருள், அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அமைச்சர் இயோ பீ யின் கூறியுள்ளார்.

டிஎன்பி நிறுவனம் வழக்கத்திற்கு மாறாக அதிகமான கட்டணத்தை விதிப்பதாக சமூகப் பாக்கங்களில் எழுந்த கருத்துகளுக்கு அந்நிறுவனம் அறிக்கையின் மூலம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள டிஎன்பி அலுவலகத்தில் அது குறித்த தகவலை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியிருந்தது. ஆயினும், அதற்கான முழு காரணத்தை அது வெளியிடவில்லை.

இது குறித்து விளக்கம் அளிக்க எரிபொருள் ஆணையம் டிஎன்பி நிறுவனத்தோடு சந்திப்பு கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. பல்வேறு காரணங்களை அவர்கள் முன்வைத்த போதும், அக்காரணங்களை எரிபொருள் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை.

#TamilSchoolmychoice

இந்த விவகாரத்தை டிஎன்பி நிறுவனம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும், தவறினால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இப்புகார்கள் குறித்து எரிபொருள் ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.