Home 13வது பொதுத் தேர்தல் அமைதியான முறையில் ஆட்சி மாற்றங்கள் நிகழும் – பிரதமர் நஜிப் உறுதி

அமைதியான முறையில் ஆட்சி மாற்றங்கள் நிகழும் – பிரதமர் நஜிப் உறுதி

549
0
SHARE
Ad
Najib parliment

கோலாலம்பூர், ஏப்ரல் 03 – எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றங்கள் ஏதும் நிகழும் பட்சத்தில், அவை எந்த ஒரு அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் நடைபெறும் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் உறுதியளித்துள்ளார்.

இன்று காலை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது  குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு தொடர்ந்து பேசிய பிரதமர் நஜிப்,

“நாங்கள் ஜனநாயகத்தை மதிப்பவர்கள், மக்களின் குரலுக்கு மரியாதை கொடுப்பவர்கள். எனவே தேர்தலுக்குப் பிறகு மத்திய அல்லது மாநில அரசுகளில்  ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில், அவை எந்த ஒரு அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் நடைபெறும்” என்று கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஜனநாயக முறைப்படி நடக்கவிருக்கும் இந்த தேர்தலுக்கு தங்களது ஒத்துழைப்பைத் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதோடு, ஊடுருவல் காரணமாக தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியான கிழக்கு சபாவில் வசிக்கும் மக்கள் அனைவரும் எந்த ஒரு பயமும் இன்றி,எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் நஜிப் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தலின் மீது நம்பிக்கை வையுங்கள் 

நாட்டில் நடைபெறவிருக்கும் இந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் மக்கள் அனைவரும் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் நஜிப் கூறியுள்ளார்.

மேலும் தேர்தல் முறைகளின் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும்  மக்கள் அனைவரும்  முழு நம்பிக்கை வைக்க வேண்டும். அதன் மீது சிறு சந்தேகங்களைக் கூட விதைக்கக் கூடாது என்று அனைத்து தரப்பினரையும் நஜிப் கேட்டுக்கொண்டுள்ளார்.