Home நாடு மலாக்காவில் நலிந்த மக்களுக்கு நோன்புத் திருநாள் அன்பளிப்பு – வேதமூர்த்தி வழங்கினார்

மலாக்காவில் நலிந்த மக்களுக்கு நோன்புத் திருநாள் அன்பளிப்பு – வேதமூர்த்தி வழங்கினார்

621
0
SHARE
Ad

புத்ராஜெயா: நோன்புத் திருநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், நலிந்த மக்களும் பண்டிகைக் கால மகிழ்ச்சியில் இருந்து விடுபட்டுவிடக் கூடாதென்னும் நோக்கில் மலாக்காவில் ஏழை மக்களுக்கு பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி பண உதவிகளை வழங்கினார்.

மலாக்கா பத்திரிகையாளர் மன்றமும் நெகிரி செம்பிலான் செய்தியாளர் சங்கமும் இணைந்து ஜூன் 3-ஆம் நாள் மாலையில் மலாக்காவில் ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அத்துடன், அவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தலைமை தாங்கினார்.

மலாக்கா ஆட்சி மன்ற உறுப்பினர் (சுகாதாரம் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு) லோவ் சீ லியோங், மலாக்கா சுற்றுலாத் தொழில் மன்றத் தலைவர் சீவ் செர்ட் ஃபோங் உள்ளிட்ட வணிகப் பிரமுகர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், நிறைவாக, அமைச்சரிடம் இருந்து உதவிகளைப் பெற்ற மக்கள் நன்றி தெரிவித்தனர்.