Home உலகம் கிரிக்கெட் : 34 ஓட்டங்களில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை

கிரிக்கெட் : 34 ஓட்டங்களில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை

1239
0
SHARE
Ad

கார்டிப் (வேல்ஸ்) – உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை வேல்ஸ் கார்டிப் நகரில் இலங்கையும், ஆப்கானிஸ்தானும் மோதின.

தனது முதல் பாதி ஆட்டத்தில் 36.5 ஓவர்களில் இலங்கை 10 விக்கெட்டுகளையும் இழந்து 201 ஓட்டங்களை எடுத்தது. எனினும் மழையின் காரணமாக ஆட்டம் சற்று நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டதால், மொத்த ஓவர்களின் எண்ணிக்கை 50-இலிருந்து 41 ஆகக் குறைக்கப்பட்டது.

இரண்டாவது பாதியில் 187 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் விளையாடத் தொடங்கியது. எனினும் 32.4 ஓவர்களிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்த ஆப்கானிஸ்தான் 152 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து 34 ஓட்டங்கள் பெரும்பான்மையில் இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்று புதன்கிழமை மலேசிய நேரப்படி மாலை 5.30 மணிக்கு இந்திய கிரிக்கெட் இரசிகர்கள் கடந்த சில நாட்களாக எதிர்பார்த்திருந்த இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் தொடங்குகிறது.

இது இந்தியாவுக்கான முதல் ஆட்டமாகும். சவுத் ஹேம்டன் நகரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

இலண்டன் ஓவல் அரங்கில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேசம், நியூசிலாந்து ஆகிய நாடுகள் மோதுகின்றன.

படம்: நன்றி – இலங்கை கிரிக்கெட் குழுவின் இணையத் தளம்