Home இந்தியா சிவப்பு அறிவிப்பு வெளியானதும் ஜாகிர் நாயக் கைது செய்யப்படலாம்!

சிவப்பு அறிவிப்பு வெளியானதும் ஜாகிர் நாயக் கைது செய்யப்படலாம்!

802
0
SHARE
Ad

புது டில்லி: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகரான ஜாகீர் நாயக்கை, மலேசியா இந்தியாவிடமே ஒப்படைக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன என டி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜாகிருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் எதிரான கைது ஆணையை இந்திய அமலாக்க இயக்குனரகம் (ஈடி) வெளியிடவுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது. 2002-ஆம் ஆண்டுக்கான நிதி மோசடி சட்டத்தின் கீழ் (இந்திய சட்டம்), மும்பை சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் அவர் மீதான விசாரணை நடத்தப்பட்டு வருவதை அது தெரிவித்தது.

#TamilSchoolmychoice

மும்பை நீதிமன்றத்தில் ஜூன் 19-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள அடுத்த விசாரணையில், ஜாக்கிருக்கு எதிராக பிணையில்லாத கைது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

பிணையில்லாத கைது ஆணை கிடைத்ததும், அனைத்துலக காவல் துறையின் சிவப்பு அறிவிப்புக்கு இந்தியா கோரிக்கை விடுக்கும் எனவும், அதன்படி ஜாகிர் நாயக் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் எனவும் நம்பப்படுகிறது.

அனைத்துலக காவல் துறையில் மலேசியா அங்கத்துவம் பெற்றிருக்கிறது. மேலும், இந்தியாவிடம் குற்றவாளியை ஒப்படைக்கும் ஒப்பந்தமும் உள்ளது எனக் கூறப்படுகிறது.