Home நாடு ஜாகிர் நாயக்குடன் சைருல் அசாரை இணைத்துப் பேசுவது தவறு, இந்தியா-மலேசியா உறவு பாதிக்கலாம்!

ஜாகிர் நாயக்குடன் சைருல் அசாரை இணைத்துப் பேசுவது தவறு, இந்தியா-மலேசியா உறவு பாதிக்கலாம்!

958
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜாகிர் நாயக் நிலைமையை சைருல் அசாருக்கு இணையாகப் பேசிய பிரதமரின் போக்கு தவறு என வழக்கறிஞரும் புக்கிட் குளூகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கர்பால் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவால் நாடுகடத்தப்பட கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் ஜாகிர் நாயக்கின் நிலைமையும், ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கும், மங்கோலிய அழகி அல்தான்துயா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் சைருல் அசார் உமாரின் நிலைமையும் ஒன்றில்லை எனக் கூறிய ராம் கர்பால், சைருல் ஒரு கொலைக் குற்றவாளி. அவருக்கு மலேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. ஆனால், ஜாகிர் நாயக்கின் வழக்கு இன்னும் விசாரிக்கப்படவில்லை என அவர் கூறினார்.

ஒருவேளை ஜாகிர் தனது வழக்கறிஞர்களின் வாதத் திறமையால் தவறிழைக்கவில்லை என்றால் கண்டிப்பாக விடுதலையாகலாம் என அவர் தெரிவித்தார். 

#TamilSchoolmychoice

ஆஸ்திரேலியா நாட்டின் சட்டத்திற்கு எதிராக சைருலுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட காரணத்தினால் மட்டுமே சைருலை அந்நாடு அனுப்பாமல் இருக்கிறதே தவிர எக்காரணத்தைக் கொண்டும் ஆஸ்திரேலியா மலேசியாவின் கொள்கைகள் மற்றும் சட்டங்களை கேள்விகுட்படுத்தவில்லை எனக் கூறினார்.

அவ்வாறே, ஜாகிர் நாயக் விவகாரத்திலும் நாம் செயல்பட வேண்டும் என ராம் கர்பால் கேட்டுக் கொண்டார். ஜாகிர் இந்தியாவில் நியாயமான விசாரணையைப் பெறுவாரா அல்லது இல்லையா என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மையில், தாய்லாந்து ஆர்வலரான பிராப்ஹான் பிபித்னாம்போர்னை அவரது நாட்டிற்கே அனுப்புவதற்கு மலேசியாவிற்கு எந்த ஒரு பிரச்சனையும் எழவில்லை. அந்நாட்டில் அவருக்கு நியாயமான முறையில் விசாரணை நடக்காது என்ற அச்சம் இருந்தபோதிலும் அவரை மலேசியா தாய்லாந்திற்கு அனுப்பியது. இது குறித்து பேசிய பிரதமர், தாய்லாந்து கேட்பதற்கு பிராப்ஹானை அனுப்பியே ஆக வேண்டும் என்று அவர் கூறினார். அதே நிலைதான் ஜாகிர்க்கு” என்று ராம் கர்பால் சுட்டிக் காட்டினார்.

இந்தியாவின் கோரிக்கைக்கு செவிசாய்க்காது மலேசியா மல்லுக்கட்டிக் கொண்டிருந்தால் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவு பாதிக்கலாம் எனராம் எச்சரித்தார்.