Home நாடு அபு சாயாப்: நாட்டில் தினமும், எந்நேரத்திலும் தீவிரவாதத் தாக்குதல்கள் நடக்கலாம்!- ஐஜிபி

அபு சாயாப்: நாட்டில் தினமும், எந்நேரத்திலும் தீவிரவாதத் தாக்குதல்கள் நடக்கலாம்!- ஐஜிபி

716
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜோலோவை (சூலு தீவு) அடிப்படை இடமாகக் கொண்டு செயல்படும் அபு சாயாப் தீவிரவாத அமைப்பின் அச்சுறுத்தல், சபா கிழக்குப் பகுதியில் அதிகமான அளவில் காணப்படுவதாக காவல் துறைத் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் குறிப்பிட்டுள்ளார்.  

கிழக்கு சாபா பாதுகாப்பு பகுதி (எஸ்கோம்) நிறுவப்பட்டிருந்தாலும் அந்த அமைப்பின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார். அவ்வமைப்பின் தாக்குதல்கள் தினமும், எந்நேரத்திலும் நடக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, எஸ்கோம்மில் எல்லா நிலைகளிலும் வலுபெற்று இருப்பதற்கு மறுசீரமைப்பு செய்யப்படும். மலேசிய ஆயுதப்படை, காவல் படை, மற்றும் கடல் படை சம்பந்தப்பட்ட படை வீரர்கள் அமர்த்தப்படுவார்கள். இந்த மறுசீரமைப்பு பணிகளை தேசிய பாதுகாப்பு அமைப்பு (எம்கேஎன்) ஏற்று நடத்தும்” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

எஸ்கோம் எந்நேரத்திலும் விழிப்பு நிலையில் இருக்க வேண்டிய அவசியத்தை அவர் சுட்டிக் காட்டினார். கடந்த மே 6-ஆம் தேதி, கிழக்கு கடற்கரை மாநிலங்களில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக எஸ்கோம் சீரமைக்கப்படும் என தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு அறிவித்திருந்தார்.