Home கலை உலகம் இராஜராஜ சோழன் குறித்து அவதூறாகப் பேசியதாக பா.ரஞ்சித் மீது புகார்!

இராஜராஜ சோழன் குறித்து அவதூறாகப் பேசியதாக பா.ரஞ்சித் மீது புகார்!

965
0
SHARE
Ad

சென்னை: இராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் மீது கும்பகோணம் காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  

அட்டகத்தி, மெட்ராஸ், காலா உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனி கவனம் ஈர்த்தவத் இயக்குனர் பா.ரஞ்சித். தொடர்ந்து சாதிய கொடுமைகளுக்கு எதிராகவும், சமத்துவம் குறித்தும் குரல் கொடுத்து வருபவர்.  

இந்நிலையில் பா.ரஞ்சித் அண்மையில், தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, சோழ மன்னர் இராஜராஜ சோழன் காலத்தில் தான் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டது என்றும் இராஜராஜ சோழனின் ஆட்சி காலம் தான் இருண்ட காலம் என்றும் பேசியிருந்தார்

#TamilSchoolmychoice

இயக்குனர் ரஞ்சித்தின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் சமூக வலைதளத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசி வரும் இயக்குனர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.