Home நாடு விவசாயிகள் அரசாங்க மானியத்தை எதிர்பார்த்து உழைப்பை குறைத்து விடுகிறார்கள்!- பிரதமர்

விவசாயிகள் அரசாங்க மானியத்தை எதிர்பார்த்து உழைப்பை குறைத்து விடுகிறார்கள்!- பிரதமர்

502
0
SHARE
Ad

கோலாலம்பூர்: விவசாயிகளின் வறுமை நிலை மற்றும் உணவு பாதுகாப்பு பிரச்சினை ஆகியவற்றை அரசாங்கம் முக்கியமாக கருதுகிறது என பிரதமர் மகாதீர் முகமட் கூறினார்.

நெல் உற்பத்தியாளர்களிடையே ஏற்படும் வறுமைக்கு முக்கியமாக அமைவது எந்நேரமும் அரசாங்க மானியங்களை நம்பியிருப்பது மட்டுமே என பிரதமர் சுட்டிக் காட்டினார். பெரும்பாலானோர் தங்களில் நிலப்பகுதிகளை முழுமையாக பயன்படுத்தாது இருப்பதையும் அவர் குறிப்பிட்டுக் கூறினார்.

200,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக ஆண்டுக்கு 1.8 பில்லியன் ரிங்கிட் பணத்தை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது என பிரதமர் கூறினார். மேலும், ஒரு வருடத்திற்கு 60 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உணவுத் தேவைகளை அரசாங்கம் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஒரு சிலர் தீவிரமாக செயல்பட விரும்பாதவர்களாக உள்ளனர். ஒரு ஏக்கர் நிலத்தில் எட்டு டன்கள் வரை பயிரிடலாம், ஆனால், அவர்கள் வெறும் நான்கு டன்னுகான பயிரை மட்டுமே பயிரிடுகிறார்கள்என்றுபிரதமர் தெரிவித்தார்.