Home நாடு பூர்வகுடி மக்களை தாழ்த்திப் பேசக் கூடாது – வேதமூர்த்தி

பூர்வகுடி மக்களை தாழ்த்திப் பேசக் கூடாது – வேதமூர்த்தி

729
0
SHARE
Ad
சுகாதார அமைச்சருடன் வேதமூர்த்தி

குவா மூசாங் – பூர்வகுடி மக்களைப் பற்றி தாழ்வாகவோ அல்லது தரக்குறைவாகவோ கருத்து சொல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

கிளந்தான், குவா மூசாங், கோல கோ பூர்வகுடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அண்மைக் காலமாக சுகாதார சிக்கலை எதிர்கொண்ட நிலையில், 14 பேர் இறந்த சோக நிகழ்ச்சியும் அங்கு நிகழ்ந்துள்ளது.

இதன் தொடர்பில், சம்பந்தப்பட்ட பாத்தே பூர்வகுடி மக்கள், சுகாதார நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்தாலும் வராமல் ஒதுங்கிக் கொள்ளும் அவர்கள், பெரும்பாலும் பாரம்பரிய மருத்துவத்தில் ஈடுபாடு கொள்கின்றனர் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

#TamilSchoolmychoice

இருந்தாலும், அவர்களின் பாரம்பரிய தன்மைக்கும் நம்பிக்கைக்கும் நாம் அனைவரும் மதிப்பு அளிக்க வேண்டும். அத்துடன் அவர்களை அணுகி, தொடர்ந்து எடுத்துரைத்தால், காலப் போக்கில் அவர்களும் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அமைச்சர் பொன்.வேதமூர்த்தியுடன் சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளியும் குவா மூசாங் மருத்துவமனைக்கு வருகை மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்று வரும் பூர்வகுடி மக்களைப் பார்வையிட்டு நலம் விசாரித்தனர். தொடர்ந்து பத்திரிகையாளர்களையும் சந்தித்து விளக்கம் அளித்தனர்.