Home Video அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை முன்னோட்டக் காணொளி வெளியீடு!

அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை முன்னோட்டக் காணொளி வெளியீடு!

1208
0
SHARE
Ad

சென்னை: நடிகர் அஜித் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் முன்னோட்டக் காணொளி இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டது.

முன்னதாக இப்படத்தின் முன்னோட்டக் காணொளி இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்ததும் டுவிட்டரில் அதிக அளவில் பகிரப்பட்ட தகவலாக இது அமைந்தது.

இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. அமிதாப் பச்சன் நடித்த பிங்க் இந்தி படத்தின் தமிழ் மொழி வடிவம்தான் இப்படம். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்

#TamilSchoolmychoice

பிரபல பத்திரிக்கையாளரும், தந்தி டிவியின் செய்தித் தொகுப்பாளர்களில் ஒருவராக ஊடக உலகில் புகழ் பெற்றவருமான ரங்கராஜ் பாண்டே இந்தப் படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இந்தப் படத்தின் மற்றொரு ஈர்ப்பு அம்சமாகும். அஜித்துடன் மோதும் வழக்கறிஞர் வேடத்தில் ரங்கராஜ் பாண்டே நடித்திருக்கிறார்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து வித்யா பாலன், ஷ்ரத்தா கபூர், டெல்லி கணேஷ், ஆண்ட்ரியா தாரங்க் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணோளியைக் காணலாம்: