Home இந்தியா வாயு புயல்: 3 இலட்சம் பேர் பாதுக்காப்பான இடத்திற்கு மாற்றம்!

வாயு புயல்: 3 இலட்சம் பேர் பாதுக்காப்பான இடத்திற்கு மாற்றம்!

683
0
SHARE
Ad

புது டில்லி: அரபிக் கடலில் உருவாகியுள்ளவாயுபுயுல், குஜராத்தில் நாளை வியாழக்கிழமை கரையைக் கடக்க உள்ளது.

இதனால், அம்மாநிலத்தின் கடற்கரையோரம் உள்ள 3 இலட்சம் பேர் பத்திரமான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கட்ச் பகுதி முதல் தெற்கு குஜராத் வரை உள்ள கடற்கரையை ஒட்டியுள்ள இடங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும் இடங்களாக கணிக்கப்பட்டுள்ளன.

கடற்கரையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று புதன்கிழமையும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாயு புயலுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார்.