இன்று கோலாலம்பூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சோபியான் அமைச்சர் சுரைடா மீது தமக்கு மதிப்பு உள்ளதாகவும், இந்த முடிவானது ஒட்டு மொத்த நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சியை எதிர்த்தே எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
முகமட் அடிப்பின் மரண விசாரணையிலிருந்து தமது மனைவியை அகற்றிய காரணமும், அவர் அப்பொறுப்பிலிருந்து விலகுவதற்கு தூண்டுதலாக அமைவதாகக் கூறினார். மேலும், நம்பிக்கைக் கூட்டணி அரசு தாங்கள் கடந்த 14-வது பொதுத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வி கண்டு விட்டதாகவும், பிடிபிடிஎன் உயர் கல்விக் கடன் விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றியதும் பெறும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இவற்றை நான் அமைச்சருடன் இருந்து கூறியிருந்தால், அரசாங்கத்தில் இருந்துக் கொண்டே கீழறுப்பு வேலைகள் செய்வதாக கூறியிருப்பர். அதனால்தான் எனது பொறுப்பிலிருந்து விலகியப்பிறகு கருத்து சுதந்திர அடிப்படையில் இதனைக் கூறுகிறேன் என்றும் அவர் கூறினார்.