Home நாடு சிறப்பு காவல் துறை அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு இணங்கி வேலை செய்ய மாட்டார்கள்!-ஐஜிபி

சிறப்பு காவல் துறை அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு இணங்கி வேலை செய்ய மாட்டார்கள்!-ஐஜிபி

706
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் அரசாங்கத்தைப் போன்று தற்போதைய அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினர் மீது சிறப்பு காவல் துறை அதிகாரிகள் கண்காணிப்பாளராகவோ அல்லது கருவியாக பயன்படுத்தவோ தாம் அனுமதிக்கப்போவதில்லை என காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் கூறினார்.

ஜனநாயக முறைகளில் எதிர்ப்பைப் பேச அனுமதிக்கும், புதிய நிருவாகத்தின் செயலை பாராட்ட வேண்டும். ஆயினும், எல்லை மீறி செயல்பட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

தற்போதையக் காலத்தில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இன மற்றும் மத பதட்டங்களுக்கு முழுக்கவும் அரசியல்வாதிகளே என்று அவர் குறிப்பிட்டார். மத விவகாரங்களை தங்களின் ஆயுதமாக எடுத்துக் கொண்டு அதன் விளைவை யோசிக்காமல் செயல்படுகின்றனர் எனவும் அவர் கூறினார்.