Home இந்தியா தீவிரவாதிகள் தாக்கியதில் இந்திய இராணுவ வீரர்கள் 5 பேர் பலி!

தீவிரவாதிகள் தாக்கியதில் இந்திய இராணுவ வீரர்கள் 5 பேர் பலி!

828
0
SHARE
Ad

ஶ்ரீநகர்இந்தியா ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த துணை இராணுவத்தினர் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு படை நடத்திய பதிலடியில் தீவிரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

அனந்த்நாக் மாவட்டத்தின் கே.பி. சாலையில், தீவிரவாதிகள் இரண்டு பேர் துணை இராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும், அவர்கள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

#TamilSchoolmychoice

புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் துணை இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் இந்தியா பாலகோட்டில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது குறிப்பிடத்தக்கது.