விசுவாசம் படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தினை ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். பெறும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி நேற்று வெளியிடப்பட்டது.
அம்முன்னோட்டக் காணோளியில் அவர் பேசும் ஒரு வசனம் பெரிய அளவில் மீம்ஸ்களாக இரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.
“ஒருத்தர் மேல் விஸ்வாசமா இருப்பதற்காக, ஏன் இன்னொருவரை அசிங்கப்படுத்துறீங்க?” எனும் அந்த வசனம் எல்லோருக்கும், எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தும் வகையில் அமைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்தியில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் மொழி வடிவம்தான் இப்படம். இப்படத்தை இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.