Home கலை உலகம் காணொளி வெளியிட்டதில் விஷாலுக்கு கடும் கண்டனம், கமல்ஹாசனை சந்தித்தது பாண்டவர் அணி!

காணொளி வெளியிட்டதில் விஷாலுக்கு கடும் கண்டனம், கமல்ஹாசனை சந்தித்தது பாண்டவர் அணி!

891
0
SHARE
Ad

சென்னை: நேற்று வெள்ளிக்கிழமை முன்னாள் தென்னிந்திய நடிகர் சங்கத்தை குறை கூறும் விதமாக காணொளி வெளியிட்ட நடிகர் விஷாலுக்கு நடிகை ராதிகா சரத்குமார், வரலட்சுமி ஆகியோர் கடுமையான விமர்சனத்தை விஷால் மீது வைத்திருந்தனர்.

இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய விஷால், நடந்ததைப் பற்றிக் கூறுவதில் எந்தவொரு தவறும் இல்லை என்று கூறினார்.  அத்தனை இன்னல்களையும் தாண்டி இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் எழத் தொடங்கியுள்ளது. ஒரு சில நேரங்களில் நாம் வரலாற்றினை பேசுகிறோம், அவ்வாறுதான் இதையும் பேசியுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

விஷாலின் இந்த நடவடிக்கையால் நடிகர் நடிகைளின் ஒற்றுமை எதிர்காலத்தில் பாதிக்கப்படும் எனும் குற்றச்சாட்டினை வைத்தபோது, அதற்கு பதிலளித்த விஷால், அப்படி ஒற்றுமை பிளவுப்பட்டிருந்தால் மலேசியாவிற்கு 400-க்கும் மேற்பட்ட கலைஞர்களை அழைத்து சென்று வெற்றியுடன் திரும்பி வந்திருக்க மாட்டோம் எனக் கூறினார்.

#TamilSchoolmychoice

“சங்க உறுப்பினர்களுக்கு தெரியும் எது உண்மை, எது குற்றச்சாட்டு என்று. தேர்தலன்று அவர்களின் வாக்குகள் நிரூபிக்கட்டும்” என்று விஷால் கூறினார்.

இதனையடுத்து, தென்னிந்திய நடிகர் சங்கர் தேர்தல் குறித்து நடிகர் கமல்ஹாசனை சந்தித்ததாக விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.