Home நாடு முழு விசாரணை முடிந்த பிறகே ஹசிக் விடுவிக்கப்படுவார்!- காவல் துறை

முழு விசாரணை முடிந்த பிறகே ஹசிக் விடுவிக்கப்படுவார்!- காவல் துறை

714
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முறையான விசாரணைகள் அனைத்தும் முடிந்த பிறகே ஹசிக் அப்துல்லா காவல் துறையின் பிணையில் விடுவிக்கப்படுவார் என மத்திய சிஐடி இயக்குனர் ஹுசிர் முகமட் கூறினார்.

பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளியில் இடம்பெற்ற இருவரில் ஒருவர் இவர் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக ஹசிக் நேற்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக காவல் துறையின் பிணையில் கீழ் ஹசிக் விடுவிக்கப்படுவார் என்று ஹசிக்கின் வழக்கை விசாரிக்கும் அதிகாரி தெரிவித்ததாக ஹசிக்கின் வழக்கறிஞர் ரமேஷ் கூறினார்.