சென்னை: நேற்று வெள்ளிக்கிழமை தமிழக இரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கும் ஏற்படும் உறையாடல்கள் தமிழில் இருக்கக்கூடாது என தென்னக இரயில்வே உத்தரவிட்டதாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து பல்வேறு தரப்புகளிலிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கான எதிர்ப்பினை தெரிவித்தன.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் மனு அளித்ததாகக் கூறப்படுகிறது. அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்ற உத்தரவை தெற்கு இரயில்வே உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை திமுக வலியுறுத்தியது.
இதனையடுத்து, சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக இரயில்வே நிருவாகம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு தவறுதலாக வந்த அறிவிப்பு எனவும், பழைய நடைமுறையே தொடரும் எனவும் அது கூறியது.
சமிபக்காலமாக தமிழகச் சூழலில் தமிழக எதிர்க்கட்சியினரின் குரலுக்கு செவி சாய்த்த வண்ணமாக மத்திய அரசு செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், எந்நேரத்திலும் யாரும் எதிர்பார்க்காத அரசியல் மாற்றங்களும் அதிர்ச்சிகளும் நிகழலாம் எனவும் கூறப்படுகிறது.