முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களையும் நிறைவு செய்து 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 334 ஓட்டங்களை எடுத்தது.
அடுத்து விளையாடிய இலங்கை 45.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியினால் புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) கிரிக்கெட் உலகம் எப்போதும் பரபரப்புடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது.
Comments