Home நாடு காணொளி சர்ச்சை : ஹசிக் அப்துல்லா விடுதலை

காணொளி சர்ச்சை : ஹசிக் அப்துல்லா விடுதலை

952
0
SHARE
Ad
படம்: நன்றி – மலேசியாகினி

கோலாலம்பூர்: அஸ்மின் அலி தொடர்பான காணொளி சர்ச்சையில் சிக்கியுள்ள சந்துபோங் தொகுதியின் பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் ஹசிக் நேற்று சனிக்கிழமை மாலை (ஜூன் 15) விடுதலை செய்யப்பட்டார்.

கோலாலம்பூர் டாங் வாங்கி காவல் நிலையத்திலிருந்து அவர் தனது வழக்கறிஞர் சிவநாதன் ராகவா என்பவருடன் வெளியேறியதாக ஊடகங்கள் தெரிவித்தன.

பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளியில் இடம்பெற்ற இருவரில் ஒருவர் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, 27 வயதான ஹசிக் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 14) கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ 2) மணிலா செல்லும் வழியில் கைது செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice