
சென்னை – வரிசையாக வெற்றிப் படங்களை வழங்கிவரும் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவரக் காத்திருக்கும் படம் ‘சிந்துபாத்’.
விஜய் சேதுபதியின் நண்பரும் இயக்குநருமான அருண்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து ‘பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘சேதுபதி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர்கள் இருவரும் இணையும் மூன்றாவது படம்தான் சிந்துபாத்.
இதில் மற்றொரு சிறப்பம்சம் விஜய் சேதுபதியின் பதின்ம வயது மகன் சூர்யாவும் அவருடன் இணைந்து நடித்திருப்பதுதான். கதாநாயகியாக அஞ்சலி நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் பாடல் காட்சி ஒன்றை படக் குழு இரண்டு நாட்களுக்கு முன்னர் காணொளி வடிவில் வெளியிட்டிருக்கிறது. “உன்னாலதான்…நான் உள்மூச்சு வாங்கி” என்று தொடங்கும் அந்தப் பாடலில் படத்தின் சில காட்சிகளும் அந்த காணொளியில் இடம் பெற்றிருக்கின்றன.
அந்தப் பாடலின் காணொளி வடிவத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: