Home நாடு உப்சி வளர்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டி’

உப்சி வளர்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டி’

1639
0
SHARE
Ad

தஞ்சோங் மாலிம் –  உப்சி (UPSI) எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக் கழகத்தில் இயங்கி வரும் வளர்தமிழ் மன்றத்தின் சீரிய முயற்சியில் இரண்டாவது முறையாகப் புதிய தேடலுடன் மீண்டும் உங்களுக்காக மலர்ந்துவிட்டது 2019-ஆம் ஆண்டுக்கான “நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி”.

நம் நாட்டில் மரபுக் கவிதைத் துறை செழித்தோங்க பெரும் பங்காற்றிய இறையருட் கவிஞர் அமரர் செ.சீனி நைனா முகம்மது அவர்களின் புனைப் பெயரான ‘நல்லார்க்கினியன்’ என்ற பெயரில் இந்தக் கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது என்பதை ஏற்பாட்டாளர்கள் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இன்றே இலக்கிய உளியால் மரபு கவிதைகளைச் செதுக்கி அனுப்புங்கள். கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்.

marabukavithai2019@gmail.com 

#TamilSchoolmychoice

மரபு கவிதையை அனுப்ப வேண்டிய இறுதிநாள் 30 ஜூன் 2019 ஆகும். தாமதமாக கிடைக்கப் பெறும் கவிதைகள் கண்டிப்பாக போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படாது.

கீழ்க்காணும் இணைப்பில் போட்டிக்கான விதிமுறைகளைக் கவனத்தில் கொள்க:

https://drive.google.com/file/d/1-5DsgqIF6EBsKGp2fFE-t61QoDakPOzO/view?usp=sharing

இரண்டு பிரிவுகளில் இந்த மரபு கவிதைப் போட்டி நடத்தப்படும். மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் பொதுமக்களுக்கு ஒரு பிரிவாகவும் இந்தக் கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது.

‘மரபு கவிதையே தமிழ் இலக்கியத்தின் வேர்’’

‘இன்பத் தமிழை இணைந்து வளர்ப்போம்”