“கட்சியில் எந்த நெருக்கடியும் இல்லை. கட்சி வழக்கம் போல் செயல்படுகிறது,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், கட்சிக்குள் நெருக்கடிகள் ஏற்பட்டால் பிகேஆரின் நடவடிக்கைகள் முடங்கிவிடும் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.
“நாங்கள் அதிகாரிகளிடம் விசாரணையை நடத்துவதற்கு ஒப்படைத்துவிட்டோம். கட்சிக்குள் நாங்கள் எப்போதும் போல செயல்படுகிறோம்,” என்று அவர் கூறினார்.
இதனிடையே, எல்லாக் காலங்களிலும் பிகேஆர் கட்சி நாகரிகமற்ற அரசியலை நிராகரிப்பதாக சைபுடின் சுட்டிக் காட்டினார்.
Comments