Home நாடு உம்மா அமைப்பு அடிப் வழக்கு விசாரணை தொடர்பாக மாமன்னரை சந்திக்க திட்டம், டோமி விலக வேண்டும்!

உம்மா அமைப்பு அடிப் வழக்கு விசாரணை தொடர்பாக மாமன்னரை சந்திக்க திட்டம், டோமி விலக வேண்டும்!

777
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரண விசாரணை குறித்து மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்திப்பதற்கு உம்மா இயக்கம் அனுமதி கோரியுள்ளதாகக் கூறியுள்ளது.

அதன் துணைத் தலைவர் காமாருசாமான் முகமட் கூறுகையில், இது குறித்து மாமன்னருக்கு கடிதம் அனுப்பிவிட்டதாகவும், ஒருவேளை நிராகரிக்கப்பட்டால் மனு ஒன்றை அவருக்கு அனுப்புவோம் என மலேசியாகினியிடம் அவர் கூறினார்.

பிரதமருக்கும் இது தொடர்பான மனு தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த மே 31-ஆம் தேதியன்று அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் டோமி தோமஸ்ஸை அரசாங்க தலைமை வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகுமாறு மனு ஒன்றினை உம்மா அமைப்பு வழங்கியிருந்தது. 

முகமட் அடிப்பின் வழக்கு விசாரணையில் டோமி தோமஸ் ஒருதலைப்பட்சமாக தலையிடுவதாக அவர் மீது குற்றம் கூறப்படுகிறது.