Home கலை உலகம் திடீர் நெஞ்சுவலி காரணமாக மணிரத்னம் மருத்துவமனையில் சிகிச்சை!

திடீர் நெஞ்சுவலி காரணமாக மணிரத்னம் மருத்துவமனையில் சிகிச்சை!

845
0
SHARE
Ad

சென்னை: திடீர் நெஞ்சுவலி காரணமாக இந்திய திரையுலகின் சிறப்புமிக்க இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அப்போலோ மருத்துவமனையில் அனுபதிக்கப்பட்டதாக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரே அவர் மூன்று முறை இருதய வலியால் பாதிக்கபப்ட்டு சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவரின் தனிப்பட்ட திரைக்கதை மற்றும் உரையாடல்களின் வழியாக தனக்கென்ற ஓர் அடையாளத்தை பத்திதவர். தமிழ் சினிமாவின் திரைமொழியை மாற்றியதில் முக்கிய பங்கு அவருக்கு உண்டு.

#TamilSchoolmychoice

உலக அரங்கில் அவரின் படங்களுக்கு மிகப்பெரும் மரியாதை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கமல்ஹசனும்கு நாயகன் திரைப்படமும், ரஜினிக்கு தளபதி திரைப்படமும் என்று அவர் இயக்கத்தில் வந்த இரு படங்களும் தமிழ் சினிமாவின் அழிக்க முடியாத வரலாறுகள். 

அவர் கடைசியாக இயக்கிய செக்கச் சிவந்த வானம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக நீண்ட நாளாக தாம் இயக்க காத்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குவதாக அண்மையில் அறிவித்திருந்தார். அதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.