Home நாடு காணொளி தொடர்பாக காவல் துறையினர் அஸ்மினின் வாக்குமூலத்தைப் பெற்றனர்!

காணொளி தொடர்பாக காவல் துறையினர் அஸ்மினின் வாக்குமூலத்தைப் பெற்றனர்!

624
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய ஓரினச் சேர்க்கை காணோளி தொடர்பாக அவர் தனது வாக்குமூலத்தை காவல் துறையிடம் அளித்துவிட்டதாக அவரது வழக்கறிஞர் என். சுரேந்திரன் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல் துறையினர் அஸ்மினுடன் தொடர்பு கொண்டதாகவும், பிகேஆர் துணைத் தலைவருமான அவரிடம் வாக்குமூலத்தை பெற்றதாகவும் சுரேந்திரன் ஓர் அறிக்கையின் மூலம் தெரியப்படுத்தினார்.

அந்த காணொளி ஓர் அவதூறு தாக்குதலுக்காக தயாரிக்கப்பட்டது. அரசியல் சதி வேலை இது” என்று சுரேந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

காவல் துறையினரின் விசாரணையில் அவர்களுக்கு உதவுவதற்கு அஸ்மினின் வாக்குமூலம் உதவியாக இருக்கும் என்ற பட்சத்தில் அதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது என்றும் சுரேந்திரன் கூறினார்.

அக்காணொளி வெளியிட்டதற்கு தெளிவான அறிகுறிகள் உள்ளன. தவறான அரசியல் தாக்குதல்களால் அமைச்சர்களின் பெயரை மாசுபடுத்துவதற்கும், பதவியிலிருந்து அகற்றுவதற்கும் இது ஒரு முறையாகக் கையாளப்படுகிறது” என்று சுரேந்திரன் கூறினார்.

குற்றவாளிக்கு, அஸ்மினின் தனிப்பட்ட தரவை அணுகுவதற்கு வாய்ப்பிருந்துள்ளது. அதிநவீன முறையில் இது நடத்தப்பட்டுள்ளது. மேலும், அரசியல் நோக்கத்திற்காக இது நடத்தப்பட்டது என்பது தெளிவாகிறது” என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பில் காவல் துறையினர் முழுமையாக விசாரித்து, இதன் பின்னணியில் இருப்பவர்களை நீதியின் முன் நிறுத்துவார்கள் என நம்புவதாக சுரேந்திரன் கூறினார்.