Home கலை உலகம் பாண்டவர் அணி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட விஷால்!

பாண்டவர் அணி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட விஷால்!

1040
0
SHARE
Ad

சென்னை: பல்வேறு விமர்சனங்கள், கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் களைகட்டியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற ஜூன் 23-ஆம் தேதி சத்யா ஸ்டுடியோ, ராஜா அண்ணாமலைபுரம், சென்னையில் நடைபெற இருக்கிறது

இத்தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணிக்கு எதிராக கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் புதிய அணி போட்டியிடுகிறது

#TamilSchoolmychoice

விஷாலின் பாண்டவர் அணியில் சென்ற முறை போட்டியிட்டவர்கள் அதே பதவிகளுக்கு இந்த முறையும் போட்டியிடுகின்றனர்அண்மையில், முன்னாள் தென்னிந்திய நடிகர் சங்கத்தை குறை கூறும் விதமாக காணொளி வெளியிட்ட நடிகர் விஷாலுக்கு கடுமையான விமர்சனங்களை நடிகையர் ராதிகா சரத்குமார் மற்றும் வரலட்சுமி விஷால் மீது முன்வைத்திருந்தனர்.

இதனிடையே, தற்போது, பாண்டவர் அணியில் போட்டியிட இருக்கும் நடிகர் நடிகையர்களின் பட்டியலை விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தலைவர்: எம். நாசர்

பொதுச் செயலாளர்: விஷால்

பொருளாளர்: கார்த்தி

துணை தலைவர்: கருணாஸ்

துணை தலைவர்: எஸ். முருகன்

செயற்குழு உறுப்பினர்களாக மொத்தம் 24 பேர் களத்தில் போட்டியிடுகின்றனர். அஜய் ரத்தினம், ரமணா, இரத்தின சபாபதி, ஜெரால்டு மில்டன், ஜூனியர் பாலையா, காளிமுத்து, ஹேமசந்திரன், கோவை சரளா, குஷ்பூ, லதா, மனோபாலா, நந்தா, பசுபதி, பிரகாஷ், பிரசண்ணா, பிரேம் குமார், ராஜேஷ், சரவணன், சிபிராஜ், சோனியா, ஶ்ரீமன், தளபதி தினேஷ், வாசுதேவன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் இம்முறை செயற்குழுவில் போட்டியிடுகின்றனர்.