Home நாடு அன்வாரின் அந்தரங்க செயலாளரைக் காணவில்லை, முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன!

அன்வாரின் அந்தரங்க செயலாளரைக் காணவில்லை, முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன!

1362
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தாம் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஓரினச் சேர்கை காணொளி விவகாரத்தில் கட்சிக்குட்பட்டவர்களின் பங்கு உள்ளது என  பொருளாதார விவகார அமைச்சரும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான முகமட் அஸ்மின் அலி கூறினார். 

பிகேஆர் கட்சியின் வாட்சாப் குழுமத்தில் அத்தனிநபரின் நடவடிக்கைகள் கண்டறியப்படாத போது அக்குழுமத்தில் குழப்பங்கள் ஏற்பட்டதாக டி ஸ்டார் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்ததாக மலேசியாகினி கூறியது.

ஹசிக் மணிலாவுக்கு செல்லும் வழியில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வெளிவந்த போது, அந்த தனிநபர் குறித்த விவரங்கள் வெளியாக தொடங்கின.

#TamilSchoolmychoice

பிகேஆர் கட்சியின் தலைவரான அன்வார் இப்ராகிமின் அந்தரங்க செயலாளர் பார்ஹாஷ் வாபா சால்வாடோர் ரிசால் உபாராக் எனப்படும் அந்நபர்தான் இவ்விவகாரத்தில் சந்தேகிக்கப்படுகிறார்.

பல முறை தாமும் தமது உதவியாளர்களும் இந்த காணொளி விவகாரத்தில் சம்பந்தப்படவில்லை என அன்வார் குறிப்பிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆயினும், பார்ஹாஷ்க்கு இந்த விவகாரத்தில் சம்பந்தமில்லை என பேராக் மாநில பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் தினகரன் கூறியுள்ளார். தற்போது, பார்ஹாஷ் விடுப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.