Home இந்தியா பீகாரில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளை நோய் காரணமாக மரணம்!

பீகாரில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளை நோய் காரணமாக மரணம்!

791
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவின் மிக மோசமான சுகாதார நிலையைக் கொண்டிருக்கும் மாநிலமான பீகாரில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளை கிருமி நோயினால் மரணமுற்றுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.  லிச்சி (lychees) பழத்தினால் ஏற்பட்ட நோய் என மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

கிட்டத்தட்ட 100 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்த மாநிலத்தில், மிகப்பெரிய வெப்ப அலைகளிலும் ஏற்பட்டுள்ளதால் இதுவரையிலும் 78 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பீகார் மாநிலம் ஜூன் தொடக்கத்தில் இருந்து கடுமையான என்செபாலிடிஸ் நோய்க்குறி (ஏஇஎஸ்) பிரச்சனையால் போராடி வருகிறது.

#TamilSchoolmychoice

முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (எஸ்கேஎம்சிஎச்) 85 குழந்தைகள் இறந்ததுடன், மேலும் 18 குழந்தைகள் தனியார் மருத்துவமனைகளில் இறந்துள்ளன.

பலியானவர்களில் பெரும்பாலோர் திடீரென இரத்தத்தில் குளுக்கோசு இழப்பை சந்தித்ததாக சுகாதார அதிகாரி அசோக் குமார் சிங் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.