Home நாடு “அன்வார் பிரதமராகும் வரை, நான் துணைப் பிரதமர் பதவியை விட்டு விலக மாட்டேன்!”- வான் அசிசா

“அன்வார் பிரதமராகும் வரை, நான் துணைப் பிரதமர் பதவியை விட்டு விலக மாட்டேன்!”- வான் அசிசா

808
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நாட்டின் பிரதமர் பதவியினை ஏற்காத வரைக்கும் தாம் துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என டத்தோஶ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் திட்டவட்டமாக கூறினார்.

தாம் தமது துணைப் பிரதமர் பதவியினை அன்வாருக்கு விட்டுக் கொடுத்து, பின்பு அதன் மூலமாக பிரதமர் பதவியினை அன்வார் பெறுவார் எனும் கருத்துகளுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

“நாட்டின் பிரதமர் செய்து கொடுத்த வாக்குறுதியும், நம்பிக்கைக் கூட்டணி அமைத்து ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த முறை இது. நேரடியாக பிரதமர் மகாதீர் பதவியை விட்டு விலகும் போது, அன்வார் அப்பதவினை ஏற்பார்” என்று வான் அசிசா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தாம் இன்னும் பிரதமர் மகாதீர் செய்து கொடுத்த வாக்குறுதியை நம்புவதாக அசிசா கூறினார்.

பிரதமர் தாம் செய்து கொடுத்த வாக்குபடி கண்டிப்பாக அன்வாருக்கு பிரதமர் பதவியினை காலம் வரும் பொழுது விட்டுக் கொடுப்பார் என்று அசிசா நம்பிக்கைத் தெரிவித்தார்.