Home நாடு “பாஸ் ஒழுக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறது, நாங்கள் மற்ற கட்சிகளைப் போல அல்ல!”- ஹாடி அவாங்

“பாஸ் ஒழுக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறது, நாங்கள் மற்ற கட்சிகளைப் போல அல்ல!”- ஹாடி அவாங்

619
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஒருவேளை பாஸ் கட்சிக்குள் யாராவது ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டால் தாம் பதவியை விட்டு விலகி விடுவார் என பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார். மேலும், கட்சியையே கலைத்து விடுவதற்கு பணிகளை மேற்கொள்வார் என்றும் அவர் கூறினார்.   

குவாந்தானில் நடைபெற்று வரும் பாஸ் கட்சியின் ஆண்டு பேரவையின் போது, பாஸ் கட்சியின் இளைஞர் பேராளர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் பேசிய ஹாடி, ஒரு போதும், ஒழுக்கப் பிரச்சனைகள் சம்பந்தப்பட்டவர்களுடன் கட்சி எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்று அவர் கூறினார்.

எங்களுக்கு, ஒழுக்கநெறிகளே கட்சியின் அடிப்படைஎன்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எனவே, ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுபவர்கள் எவரையும், பாஸ், கட்சியில் வைத்திருக்காது என்று அவர் கூறினார்.

இம்மாதிரியான விவகாரங்களை எளிதாக எண்ணும் கட்சியைப் போல இல்லை நாங்கள்” என்று சமீபத்தில் மலேசிய அரசியலில் அதிக அளவில் பேசப்பட்ட அஸ்மின் அலியின் காணொளி குறித்து பேசுவதாக அமைந்தது அவரது உரை.  மேலும், தாம் யாரையும் குறிப்பிட்டு இக்கருத்துகளை முன்வைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.