Home நாடு ஹசிக் அப்துல்லா அந்தரங்க செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்!

ஹசிக் அப்துல்லா அந்தரங்க செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்!

619
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மூலத் தொழில் துணை அமைச்சரின் அந்தரங்க செயலாளர் பொறுப்பிலிருந்து ஹசிக் அப்துல்லா நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு இன்று வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

கடந்த ஜூன் 18-ஆம் தேதியிலிருந்து அவரது பணிநீக்கம் அமலுக்கு வந்தது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

பொருளாதார விவகார அமைச்சரான அஸ்மின் அலிக்கு எதிராக ஓரினச் சேர்க்கை தொடர்பான காணொளியை வெளியிட்ட ஹசிக் அசிஸ் அண்மையில், மூலத் தொழில் துணையமைச்சரான ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின்னின் அந்தரங்க செயலாளர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

மூன்று நாட்களுக்குள் ஹசிக் அவ்வாறு செய்ததற்கான காரணத்தை கூற அவகாசம் தரப்பட்டன.  தவறான அரசியல் போக்கினை தனது செயலாளர் கொண்டிருப்பதன் அடிப்படியில்தான் தாம் ஹசிக்கை இடைநீக்கம் செய்ததாக ஷம்சுல் கூறியிருந்தர். தற்போது, அவரை பொறுப்பிலிருந்து அமைச்சு முழுமையாக நீக்கம் செய்துள்ளது.