Home நாடு “பிகேஆர் விவகாரங்களில் நான் தலையிடமாட்டேன்!”- பிரதமர்

“பிகேஆர் விவகாரங்களில் நான் தலையிடமாட்டேன்!”- பிரதமர்

683
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி தொடர்பான ஓரினச் சேர்க்கை காணொளி காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் வேளையில், அது சம்பந்தமாக அஸ்மின் தற்காலிக விடுப்பு எடுக்க வேண்டியதில்லை என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

அஸ்மினின் காணொளி, அவரை அவமானப்படுத்தவும், அவரை வேண்டுமனே வெளியேறும்படி வற்புறுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு நாடகம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், தாம் ஒருபோதும் பிகேஆர் கட்சிக்குள் நடக்கும் கருத்து வேறுபாடுகள் குறித்து எந்தவொரு கருத்துகளை தெரிவிக்கப்போவதில்லை என்றும், அக்கட்சியின் உள்நடப்புகளில் தாம் தலையிடப்போவதில்லை எனவும் கூறினார்.