Home நாடு அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் தமிழ், மாண்டரின் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் – பாஸ் இளைஞர் தலைவர்

அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் தமிழ், மாண்டரின் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் – பாஸ் இளைஞர் தலைவர்

901
0
SHARE
Ad

குவாந்தான் – இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு கண்ட பாஸ் கட்சியின் ஆண்டு மாநாட்டில் நிறைவுரை ஆற்றிய பாஸ் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் கைரில் நிசாம் கிருடின், அனைத்து ஆரம்பத் தமிழ்ப் பள்ளிகளிலும் தமிழ், மாண்டரின் மொழிகள் கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

அதே போன்று மாணவர்களுக்கு ஜாவி மொழி படிப்பது, எழுதுவது எப்படி என்பதும் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

குவாந்தானில் சுமார் ஆயிரம் பேராளர்கள் கலந்து கொண்டிருக்கும் பாஸ் மாநாட்டில் பேசிய கைரில் தேசிய அளவில் இனங்கள் ஒன்றுபட்டு ஒருங்கிணைக்கப்பட மொழிகளின் பயன்பாடு மிகவும் முக்கியம் என்றும் கூறினார்.

#TamilSchoolmychoice

“நமது நண்பர்கள் மொழி வாரியான ஆரம்பத் தமிழ்ப் பள்ளிகள் நிலைத்திருக்கத் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால் இந்த மொழிகள் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப் பட்டால், இனங்களுக்கிடையே ஒற்றுமை மேலோங்கும் என்பதோடு மலேசிய அரசியல் சாசனத்தின் மேன்மையும் மதிக்கப்பட வேண்டும்” என்றும் கைரில் அறைகூவல் விடுத்தார்.

பாஸ் மாநாட்டில் பேசியபோது பேராளர்களில் ஒருவரான சலாமியா முகமட் நோர், மொழி வாரியான பள்ளிகளை மூடிவிட வேண்டும் என்று கூறி பெரும் சர்ச்சையை எழுப்பினார்.

ஆனால் இது அவரது சொந்தக் கருத்து என்றும் பாஸ் கட்சியின் அதிகாரத்துவ நிலைப்பாடல்ல என்றும் தேசிய உதவித் தலைவர் சம்சுரி மொக்தார் கூறி சர்ச்சைகளைத் தணித்தார்.