இந்த புதிய குற்றச்சாட்டுகள் மூலமாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் 87-ஆக உயர்ந்துள்ளது.
அவர் ஏற்கனவே 47 குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் பணமோசடி வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.
நாளை புதன்கிழமை (ஜூன் 26) கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் சாஹிட் மீது மேலும் ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன. அதனை அடுத்து வருகிற வியாழக்கிழமை மேலும் கூடுதல் 33 குற்றச்சாட்டுகளை ஷா அலாம் அமர்வு நீதிமன்றத்தில் எதிர்கொள்வார் என்று அறியப்படுகிறது.
அவர் இலஞ்சம் பெற்றதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் பிரிவு (எ) (பி) கீழ் 33 குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்வார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. மீதமுள்ள ஏழு குற்றச்சாட்டுகள் ஊழல் தொடர்பான தண்டனைச் சட்டம் பிரிவு 165-இன் கீழ் இடம்பெற்றுள்ளன.