Home உலகம் கோப்பா அமெரிக்கா : பிரேசில் 2-0 கோல்களில் அர்ஜெண்டினாவைத் தோற்கடித்தது

கோப்பா அமெரிக்கா : பிரேசில் 2-0 கோல்களில் அர்ஜெண்டினாவைத் தோற்கடித்தது

910
0
SHARE
Ad

பெலோ டிசோம்சி (பிரேசில்) – (மலேசிய நேரம் காலை மணி 10.25 மணி நிலவரம்) காற்பந்து விளையாட்டில் முன்னணி வகிக்கும் தென் அமெரிக்காவின் நாடுகள் பங்கு பெறும் கோப்பா அமெரிக்கா கிண்ணத்திற்கான அரையிறுதிச் சுற்று போட்டிகளில் இன்று புதன்கிழமை மலேசிய நேரப்படி காலை 8.30 மணியளவில் பிரேசிலின் பெலோ டிசோம்சி நகரில் (Belo Horizonte) தொடங்கிய பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில் காற்பந்து விளையாட்டின் முன்னணி நாடுகளான பிரேசில்-அர்ஜெண்டினா விளையாடின.

இந்த ஆட்டத்தில் 19-வது நிமிடத்தில் பிரேசிலின் கேப்ரியல் ஜீசஸ் முதல் கோலை புகுத்த, இரண்டாவது பாதி ஆட்டத்தில் 71-வது நிமிடத்தில் ரோபர்ட்டோ பெர்மினோ இரண்டாவது கோலைப் புகுத்தி பிரேசிலை முன்னணிக்குக் கொண்டு வந்தார்.

லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா குழு எவ்வளவோ முயற்சிகள் செய்தும் கோல் எதுவும் அடிக்க முடியாமல் தடுமாறியது.

#TamilSchoolmychoice

காற்பந்து விளையாட்டின் உலகின் மிகச் சிறந்த குழுக்களைக் கொண்டிருக்கும் நாடுகளாகவும், பரம வைரிகளாகவும் திகழும் பிரேசில்-அர்ஜெண்டினா இடையிலான இன்றைய ஆட்டம் காற்பந்து இரசிகர்களை உலக அளவில் ஈர்த்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இறுதி ஆட்டத்தில் நுழைகிறது பிரேசில்.