Home நாடு ஹசிக் அப்துல்லா பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்

ஹசிக் அப்துல்லா பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்

741
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய காணொளியில் அஸ்மின் அலியோடு இருப்பது நான்தான் என பகிரங்கமாக அறிவித்த ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ், அந்த அறிவிப்பு விடுத்த மூன்று வாரங்கள் கழித்து நேற்று புதன்கிழமை பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

பிகேஆர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் முடிவுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இந்த முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டது என்றும் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்தார்.

சந்துபோங் தொகுதி இளைஞர் பகுதித் தலைவரான ஹசிக் அப்துல்லா எந்தவித ஆதாரமும் இன்றி பிகேஆர் கட்சி தலைமைத்துவம் ஊழலில் ஈடுபட்டிருக்கிறது எனக் குற்றம் சாட்டியிருப்பதால் அவரை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அன்வார் கூறினார்.

#TamilSchoolmychoice

ஹசிக்குக்கு வழங்கப்பட்ட காரணம் கோரும் கடிதத்திற்கு ஜூலை 2 தேதியிட்ட கடிதம் வழி அவர் தந்திருக்கும் விளக்கங்களை ஆராய்ந்த பிகேஆர் கட்சியின் அரசியல் குழு இந்த முடிவை எடுத்தது.

கடந்த ஜூன் 20-ஆம் தேதி மூலத் தொழில் துணையமைச்சரும், தகவல் பிரிவுத் தலைவருமான  சம்சுல் இஸ்கண்டாரின் தனிப்பட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து ஹசிக் அப்துல்லா நீக்கப்பட்டார்.