Home கலை உலகம் வனிதா விஜயகுமாரைத் தேடும் காவல் துறை – பிக் பாஸ் இல்லத்தில் நுழைந்தது

வனிதா விஜயகுமாரைத் தேடும் காவல் துறை – பிக் பாஸ் இல்லத்தில் நுழைந்தது

1091
0
SHARE
Ad

சென்னை – தற்போது ஸ்டார் விஜய் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் எதிர்பாராத திருப்பம் அரங்கேறியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் 16 -வது பங்கேற்பாளராக பங்கு பெற்றுள்ள விளம்பர மாடலான மீரா மீது காவல் துறை புகார்கள் நிலுவையில் இருப்பதாகவும் அதன் காரணமாக காவல் துறை அவரைத் தேடி வருவதாகவும் வதந்திகள் உலவி வந்தன.

இதன் காரணமாக அதிரடியாக காவல் துறை பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்து மீராவை விசாரிக்குமா அல்லது கைது செய்யுமா என்ற ஆரூடங்கள் சமூக ஊடகங்களில் உலவி வந்தன.

காவல் துறை கைதைத் தடுக்கும் விதமாகவும் – தப்பிக்கும் விதமாகவும்தான் மீரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார் என்றும் சில தரப்புகள் செய்தி பரப்பி வருகின்றன.

வனிதாவையும் தேடும் காவல் துறை

#TamilSchoolmychoice

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலையில் வெளியான ஊடகத் தகவல்களின்படி தற்போது பிக்பாஸ் – 3 நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் வனிதா விஜயகுமார் மீது அவரது முன்னாள் கணவர் ஆனந்தராஜ் தெலுங்கானா மாநில காவல் துறையில் புகார் ஒன்றைச் செய்துள்ளார்.

அந்தப் புகாரின்படி தங்களின் குழந்தையை வனிதா கடத்தி விட்டு வந்தார் என ஆனந்தராஜ் செய்திருக்கும் தொடர்பில் தெலுங்கானா காவல் துறையினர் தமிழகக் காவல் துறையினரைத் தொடர்பு கொண்டிருக்கின்றனர்.

இத்தனை நாட்களாக வனிதா தலைமறைவாகி இருக்கிறார் எனக் காரணம் காட்டி தெலுங்கானா காவல் துறை இந்தப் புகாரைக் கிடப்பில் போட்டது. ஆனால் தற்போது வனிதா பிக்பாஸ் வீட்டில் இருப்பது தெரிந்து, இந்தத் தகவலை ஆனந்தராஜ் மீண்டும் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு வர, தெலுங்கானா காவல் துறை நேரடியாக தமிழ்நாட்டுக்கு வந்து விட்டது.

வனிதாவை விசாரிக்க காவல் துறையினர் பிக்பாஸ் இல்லத்தில் நுழைந்திருக்கின்றனர் என ஊடகங்கள் தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து தமிழகக் காவல் துறையினர் வனிதாவை பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியே வரச் சொல்லி விசாரித்திருக்கின்றனர் என தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.