அம்னோ கட்சி கணக்கில் முடக்கப்பட்ட நிதிகள் அனைத்தும் கடந்த 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் பெறப்பட்டது என்று அவர் கூறினார்.
“இது குறித்த ஆவணங்களை விரிவாகப் பார்த்ததால் இந்த உறுதியை நான் செய்யத் துணிகிறேன்.” என்று அவர் குறிபிட்டார்.
“கடந்த 2011, 2012, மற்றும் 2013-இல் நஜிப்பின் கணக்கிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் நிதிகள் யாவும் 2014-ஆம் ஆண்டில் முழுமையாக பயன்படுத்தப்பட்டன. 2018-இல் கணக்கிலிடப்பட்ட நிதியானது கடந்த 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டில் பெறப்பட்டதாகும். அதற்கும் 1எம்டிபி நிதிக்கும் சம்பந்தம் இல்லை” என்று அவர் கூறினார்.
1எம்டிபியிலிருந்து அம்னோ பணம் பெற்றதாகக் கூறப்படுவதை நிரூபிக்க ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி 1எம்டிபி நிதியுடன் தொடர்புடையதாக நம்பப்படும் தனிநபர் மற்றும் நிறுவனங்களில் கணக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முடக்கியது.