Home நாடு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ள அம்னோ உறுப்பினர்களை பெர்சாத்து சேர்த்து கொள்ளக் கூடாது!- குவான் எங்

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ள அம்னோ உறுப்பினர்களை பெர்சாத்து சேர்த்து கொள்ளக் கூடாது!- குவான் எங்

972
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ள முன்னாள் அம்னோ உறுப்பினர்களை, குறிப்பாக 1எம்டிபி பிரச்சனையுடன் தொடர்புடையவர்களை பெர்சாத்து கட்சி அனுமதிக்காது என்று தாம் நம்புவதாக ஜசெக கட்சி பொதுச் செயலாளர் லிம் குவான் எங் இன்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மலாய்க்காரர்களின் ஒற்றுமைக்காக பெர்சாத்து கட்சியில் அம்னோ உள்ளிட்ட இதர மலாய்க்காரர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளை ஒன்றாக இணைந்து செயல்பட பெர்சாத்து கட்சித் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்திருந்தது குறித்து அவர் கருத்துரைத்தார்.

துன் ஏற்றுக் கொள்ளாத ஒரு சிலர் இருப்பார்கள். நிச்சயமாக, முன்னாள் அம்னோ பொதுச் செயலாளரும் இப்போது பொருளாளருமான தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் மற்றும் நஜிப் ரசாக் ஆகியோரை மகாதீர் ஏற்றுக் கொள்ள மாட்டார்” என்று குவான் எங் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மலாய்க்காரர்களின் அரசியல் அதிகாரத்தை ஒன்றிணைக்கும் முயற்சியாக  அம்னோ உட்பட அனைத்து மலாய் அரசியல் கட்சிகளையும் பெர்சாத்து கட்சியில் இணையுமாறு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹாரி ராயா விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பிரதமரும் பெர்சாத்து கட்சியின் தலைவருமான டாக்டர் மகாதீர் முகமட் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.